Saturday, August 30, 2008

மன்னிக்க வேண்டுகிறேன்

காலையில் எழுந்த போது கண் எரிச்சலுடன் மணியை பார்த்தேன். 8:49 என காட்டியது. கொஞ்சம் கூட எனக்கு ஞாபகம் இல்லை இன்று என் மனைவியின் பிறந்த நாள் என்று. சாவகசமா எல்லா வேலைகளையும் பார்த்துவிட்டு, தண்ணி அடிக்கும்போது ( corporation தண்ணி குழாயில் தாங்க, bar-ல இல்ல ) அடிக்கும்போது , Head phone-ஐ மாட்டிக்கொண்டு என் தங்கைக்கு போன் பண்ணி ரெம்ப நாள் ஆச்சுன்னு போன் பண்ணி பேசும்போது தான் " அண்ணே இன்னைக்கு அண்ணிக்கு பிறந்த நாள் . வாழ்த்து சொன்னியா" என்று கேட்டாள்.

ஆஹா .. நைட் தான் விஷ் பண்ண மறந்தாச்சு , இப்பவும் விஷ் பண்ணலேனா அப்புறம் விரட்டி விரட்டி அடிபாலே என்று நினைக்கும் போதே உதறல் எடுத்தது.
இந்த இடத்தில் வாசகர்களுக்கு ( வாசகர்களா டேய் உனக்கே இது ஓவரா இல்ல ? ) , ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். என் மனைவி பிரசவசத்திற்காக அவள் பிறந்த வீட்டிற்கு சென்றுருக்கிறாள். நான் சென்னையில் என் நண்பர்களுடன் தங்கி இருக்கிறேன்.

அவளை பற்றியும் கொஞ்சம் சொல்ல வேண்டும். M.phil படித்தவள் , அழகானவள், திறமையானவள். எந்த வேலை கொடுத்தாலும் எல்லோரையும் விட ஒரு படி மேலாக சிறப்புடன் செய்து முடிப்பவள். ரொம்பவும் பாசக்காரி. அதை விட அதிகமாக கோபக்காரி. கோபம் வந்தால் என்ன செய்வாள் என்று அவளே அறியமாட்டாள். இந்த வகையில் நான் கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டவன். இப்போ சொல்லுங்கள் பிறந்தா நாள் வாழ்த்து சொல்லாததிற்கு எனக்கு உதறல் எடுக்குமா எடுக்காதா ?

உடனே தங்கையின் போன் கால்-ஐ கட் பண்ணிவிட்டு , என் மனைவிக்கு கால் பண்ணினேன். அவள் தான் எடுத்தாள். ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி.. " ஹாய் அம்மணி ( நான் செல்லமாக அப்படிதான் அவளை கூப்பிடுவேன். ) எப்படி இருக்க ? என் செல்ல அம்மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் " என்று சொல்ல..
"பேசாத உனக்கு கொஞ்சம் கூட என் மேல பாசமே இல்ல.., நைட் உன்னால ஒரு SMS கூட அனுப்ப முடியலையா"

" நீ தூங்கிகிட்டு இருப்பே , எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு தான் நான் கால் பண்ணல " ( what a great samalification ( its a new english word, it will be added in next oxford dictionary ) )

"பொய் மேல பொய் சொல்லாதா.. "

( கரெக்டா கண்டுபிடிச்சிட்டாளே ) " பொய்யா .. இல்ல அம்மணி உண்மையதான் சொல்றேன். "

" எல்லோரும் கால் பண்ணி விஷ் பண்ணினாங்க .. நீ ஒருத்தன் தான் இவ்ளோ லேட்டா விஷ் பண்ற. முறைப்படி நீ தான் எனக்கு விஷ் பண்ணிருக்கணும். பண்ணுனியா "

( ஆஹா சண்டைய ஆரம்பிசுட்டாளே ) "அம்மணி office-க்கு லேட் ஆகிடுச்சு..நான் கிளம்பிட்டு அப்புறம் பேசுறேன்.."

"போ .. நீ ஒண்ணும் என் கூட பேச வேண்டாம். எல்லாம் என் தலை விதின்னு நினைத்துகொள்கிறேன். "

( அப்பாடா இப்ப great escape )

( இன்னும் தொடரும் )

No comments: